Thursday, May 14, 2026
Home > Cinema > அப்டேட் கேட்டு கேட்டு பிரஷர் பண்ணாதீங்க…. மேடையில் சிம்பு வைத்த வேண்டுகோள்!

அப்டேட் கேட்டு கேட்டு பிரஷர் பண்ணாதீங்க…. மேடையில் சிம்பு வைத்த வேண்டுகோள்!

திக்கற்று சென்ற சிம்புவின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த மாநாடு திரைப்படம் மீண்டும் அவரை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸானது.

மாநாடு படத்தின் வெற்றியால் மிகப்பெரிய ஹைப் இருந்ததால் ரிலீஸுக்கு முன்பே சேட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை மூலமாக லாபம் பார்த்துவிட்ட தயாரிப்பாளருக்கு திரையரங்கு மூலமாக வந்த தொகை கூடுதல் லாபம்தான். ஆனால் திரையரங்கில் சொல்லிக்கொள்ளும் படி வசூல் இல்லை. வெறும் 10 கோடிதான் தயாரிப்பாளருக்கு பங்காக வந்துள்ளதாம்.

ஆனால் படத்தை வெற்றிப்படமாக ப்ரமோட் செய்து வருகிறார்கள். நேற்று இந்தபடத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில் “என் படத்துக்கு மட்டும் இல்லை, யார் படத்துக்கும் தினமும் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்காதிர்கள். இதனால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அழுத்தம் அதிகமாகி அவர் எதாவது தவறான முடிவை எடுத்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார்.