தமிழ் சினிமா மற்றும் சீரியல் என இரண்டு துறைகளிலும் பிரபலமாக அறியப்படுபவர் பப்லு பிருத்விராஜ். 57 வயதாகும் இவர், சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த 26 வயது ஷீத்தல் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். இருவரும் இணைந்து ஒன்றாக காதல் பறவைகளாக வலம் வந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக இருவரும் எந்த வீடியோவையும் பதிவிடவில்லை. சமீபத்தில் பப்லு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய போதும் ஷீத்தல் அவருடன் இல்லை. மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஏற்கனவே பகிர்ந்த வீடியோக்களையும் ஷீத்தல் டெலிட் செய்தனர்.

ஆனால் தாங்கள் இன்னும் பிரியவில்லை என்றுதான் சொல்லி வருகிறார் பிருத்விராஜ். இது சம்மந்தமான கேள்விக்கு “நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நாங்கள் எங்குமே சொல்லவில்லை. நீங்களாக நாங்கள் பிரிந்துவிட்டோம் என்கிறீர்கள். நான் ஒரு நடிகன். என் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டியது என் வேலை. அதை விட்டுவிட்டு என் அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைப்பது அநாகரிகம். நான் என்ன செய்தாலும் விமர்சிக்கவும், ஆதரிக்கவும் 10 பேர் இருப்பார்கள். என் தனிப்பட்ட விசயங்களை பொதுவெளியில் வைக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

பப்லு இப்படி சொன்னாலும் இருவரும் பிரிந்துவிட்டது உறுதி என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இருவரின் பிரிவுக்கும் காரணம் பப்லுதான் என்று கூறியுள்ளார் சினிமா கிசுகிசு ஸ்பெஷலிஸ்ட் பயில்வான் ரங்கநாதன். பப்லு திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தது ஷீத்தல் பிரிவுக்குக் காரணம் என அவர் கூறியுள்ளார்.

பிரேக் அப்புக்கு அப்புறம் சோகமாகவும் எரிச்சலோடும் பப்லு பல நேர்காணல்களை கொடுத்து வந்தாலும் ஷீத்தல் என்னவோ படுஜாலியாகதான் இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் உடையில் நீந்திக் கொண்டிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் அந்த வீடியோவில் “ரொம்ப ஜாலியாக இருக்கீங்க” என்கிற ரீதியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

