Tuesday, October 7, 2025
Home > Cinema > இயக்குனர் ஷங்கரின் மெஹா பட்ஜெட் வேள்பாரி… இத்தனை பாகங்களாக உருவாகிறதா?

இயக்குனர் ஷங்கரின் மெஹா பட்ஜெட் வேள்பாரி… இத்தனை பாகங்களாக உருவாகிறதா?

இப்போது ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து இயக்கும் படம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்ததும், அவர் தன்னுடைய அந்நியன் படத்தை இந்தியில் இயக்குவார் என சொல்லப்பட்டது.

ஆனால் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் உருவாவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தற்போதைய டரண்ட்டான வரலாற்று படம் ஒன்றை உருவாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். எழுத்தாளரும் மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை அவர் படமாக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க யாஷுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் 3 பாகங்களாக இந்த படத்தை உருவாக்க உள்ளாராம்.