Friday, May 10, 2024
Home > Cinema > வீட்டுக்கு அழைத்து ஜூஸ் கொடுத்து படுக்கைக்கு… ஷாலு ஷம்முக்கு நடந்த கேஸ்டிங் கவுச் சம்பவம்!

வீட்டுக்கு அழைத்து ஜூஸ் கொடுத்து படுக்கைக்கு… ஷாலு ஷம்முக்கு நடந்த கேஸ்டிங் கவுச் சம்பவம்!

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

`

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

```
```

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக சேலையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இப்போத அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்நிலையில் தனக்கு திரையுலகில் நடந்த மோசமான பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த இயக்குனர் படம் சம்மந்தமாக பேசுவதற்காக என்னை ஒரு இடத்துக்கு வரவழைத்தார். நான் அங்கு சென்ற போதுதான் அது அவருடைய வீடு என்று எனக்கு தெரியும். ஜூஸ் கொடுத்து பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென படுக்கையறைக்கு அழைத்தார். நான் பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன்.” எனக் கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட அந்த இயக்குனர் விஜய் தேவரகொண்டா படத்தை இயக்கியவர் என்றும் கூறியுள்ளார்.