சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “மனிஷா யாதவ் என்ற நடிகை சீனு ராமசாமி இயக்கிய இடம்பொருள் ஏவல் படத்தில் நடிக்க கொடைக்கானல் சென்றார். அங்கே அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத மனிஷா படப்பிடிப்பை விட்டுவிட்டு சென்னை வந்ததும் எனக்கு போன் போட்டு அவர் கொடுத்த டார்ச்சர்களை கூறி புலம்பினார். அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே செல்ல காரணமாக இருந்தார் சீனு ராமசாமி” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இது வைரல் ஆன நிலையில் இப்போது இயக்குனர் சீனு ராமசாமி பிஸ்மிக்கு பதிலளிக்கும் வகையில் ” வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.” எனக் கூறி ஒரு பட நிகழ்ச்சியில் மனிஷா இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஆனால் மனிஷா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நான் அமைதியாக இருப்பதால் என்னைப் பற்றி சொல்லப்படுவதெல்லாம் உண்மை என்றாகிவிடாது. நான் 9 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை அவமரியாதையாக நடத்திய ஒருவரின் படத்தின் நான் நடிக்க மாட்டேன்” என அதிரடியாகக் கூறி பிஸ்மி சொன்னது உண்மைதான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து சீனு ராமசாமி பற்றி மேலும் பேசியுள்ள பிஸ்மி, மனிஷா யாதவ் மட்டும் இல்லை வேறு சில நடிகைகளும் சீனு ராமசாமியால் இப்படி தொல்லைக்கு ஆளாகியுள்ளார். சீனு ராமசாமி இயக்க இருந்த நீர்ப்பறவை படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பிந்து மாதவி. ஆனால் சீனு ராமசாமியின் தொல்லை தாங்காமல் 10 நாட்களில் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்” எனக் கூறியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
