நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சரண்யா பொன்வண்ணணுடன் சேர்ந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்த நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் உள்ள பல இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், சூர்யா என பல நடிகர்களுடன் சேர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரை பொதுவாக அனைவரும் சேலையில்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் திடீரென்று ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை அணிந்து செம மாடனாக மாறிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா.

மலையாளத்தில் 75க்கும் மேற்பட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஏபி ராஜனின் மகள் ஆவார். நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை கடந்த 1995ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்களுக்கு பிரியதர்ஷினி சாந்தினி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அன்று பெய்த மழை, அஞ்சலி, தசரதன், கருத்தம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த சரண்யா பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்து அம்மா நடிகையாக மாறிய இவர் தற்போது இளம் நடிகர்களுக்கு அம்மா நடிகையாக வலம் வருகிறார்.


இப்போது இருக்கக்கூடிய பல நடிகர்களுக்கு இவர் தான் அம்மா எப்போதும் சேலை அணிந்து கொண்டு சினிமாவில் வலம் வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன் குடும்பத்துடன் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் சுற்றுலா சென்று விடுதியில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.


இதில் அவர் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஜீன்ஸ் சட்டை அணிந்து கொண்டு செம மாடனாக காட்சியளித்தார். இவரது மகளைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அழகில் அம்மாவையும் மிஞ்சிட்டாங்க என்று தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ…


