Monday, June 15, 2026
Home > Cinema > பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையைக் கிளப்பும் யசோதா… 3 நாளில் இத்தனைக் கோடி வசூலா?

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையைக் கிளப்பும் யசோதா… 3 நாளில் இத்தனைக் கோடி வசூலா?

சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா ஒரு வாடகைத்தாயாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் தாயாக நடித்துள்ளார். அதில் எழும் பிரச்சனைகளைப் பற்றிய கதையாக வெளியாகியுள்ளது சமந்தா.

கடந்த 11 ஆம் தேதி வெளியான யசோதா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் மட்டும் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த யசோதா, 3 நாட்களில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். இந்த படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமந்தா சமீபத்தில்  “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது. உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.