Sunday, May 5, 2024
Home > Cinema > உடல்நிலையில் முன்னேற்றம்… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

உடல்நிலையில் முன்னேற்றம்… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

`

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர்  சமந்தா “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது. உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறி இருந்தார்.

```
```

இந்நிலையில் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு  சென்றுள்ள சமந்தா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சமீபத்தைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.