Thursday, June 4, 2026
Home > Cinema > குத்துன்னா இப்படிதான் குத்தனும்… மேடையில் வைரல் டான்ஸ் போட்ட ரஞ்சிதெமே ராஷ்மிகா!

குத்துன்னா இப்படிதான் குத்தனும்… மேடையில் வைரல் டான்ஸ் போட்ட ரஞ்சிதெமே ராஷ்மிகா!

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Actress Rashmika

அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

Actress Rashmika

சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

Actress Rashmika

நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.

Actress Rashmika

ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட பேன் இந்தியா நடிகையாக வளர்ந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் கன்னட சினிமாவிலேயே நடிப்பதில்லை. அந்த அளவுக்கு பேன் இந்திய அளவில் பிஸியாகியுள்ளார்.

Actress Rashmika

வாரிசு படத்தில் விஜய்க்கு இணையாக நடனமாடி கலக்கி இருந்த ராஷ்மிகா, தற்போது விழா ஒன்றில் தனது துள்ளலான நடனத்தை வெளிப்படுத்த அது வைரலாகியுள்ளது. அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.