கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தார்.இவர் பெங்களூர் ராமையா கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இப்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சனோடும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த இவர் இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, இப்போது மீண்டும் கார்த்தியோடு இணைய உள்ளார். கார்த்தி இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இதையடுத்து மற்றொரு தமிழ் நடிகரான தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் விரைவில் நடிக்க உள்ள தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படம் ஜனவரி மாதம் தொடங்கும் என தெரிகிறது.
