Tuesday, May 12, 2026
Home > Cinema > லியோவில் வந்து சிக்கிய ஏழரை, துரத்திவிட்ட ரஜினி.. அசராமல் அடித்துவிட்டு லோகேஷ்!! தலைவர் 171 அப்டேட்!

லியோவில் வந்து சிக்கிய ஏழரை, துரத்திவிட்ட ரஜினி.. அசராமல் அடித்துவிட்டு லோகேஷ்!! தலைவர் 171 அப்டேட்!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கிய நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகள் ரிலீஸாகி ஒரு ஷோ முடிந்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்தனர்.

ஆனால் முதல் காட்சிகள் முடிந்த உடனேயே கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என சொல்லி வந்தாலும், டிவிட்டரில் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பலரும் இந்த படம் லோகேஷ் இயக்கியது போலவே இல்லை என்றும், அவரின் இணை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியது போல உள்ளதாகவும் கூறினர். முன்னர் விஜய்க்கும் லோகேஷ்க்கும் இடையே சண்டை எனப் பரவிய தகவல் உண்மைதான் போல எனக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் லியோ படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய ரத்னகுமார் ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக பேசினார். ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் சொன்ன காக்கா கழுகு கதையை பற்றி கிண்டலாக ரத்னகுமார் பேச அது ரஜினி ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இந்நிலையில் இப்போது லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் உருவாக்கத்தில் ரத்னகுமார் இருக்கக் கூடாது என ரஜினிகாந்த் உறுதியாக சொல்லிவிட்டாராம். அதனால் தலைவர் 171 படத்தில் லோகேஷ் ரத்னகுமாருக்கு கல்தா கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ரத்னகுமாரோ தான் இயக்கும் படத்தில் பிஸியாக இருப்பதால் தலைவர் 171 படத்தில் நான் பணியாற்றவில்லை என சொல்லி திரிவதாக சொல்லிச் செல்கிறது பட்சி.