தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
இந்த முறை போட்டியாளராக சென்றுள்ள பூர்ணிமா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.
இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.
அப்போது “நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன். வெளியில் இருந்து வருபவர்கள் எனக்கு ஆதரவாக பேசினால் நன்றாக இருக்கும். ஆனால் என்னோட ஒன்னா படிச்ச இந்துஜா என் முகத்தக் கூட பாக்கல” என மிகவும் சோர்ந்து போய் பேசினார்.
இந்நிலையில் கமல் பேச்சைக் கூட மதிக்காமல் சில நேரம் பூர்ணிமா நடந்து கொள்கிறார். பலரிடமும் டபுள் மீனிங்கில் பேசுகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டு வருகின்றன. கமல் கூட இந்த வாரம் அவரைக் கடுமையாக கண்டித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் பூர்ணிமாவின் தந்தை இப்போது அளித்துள்ள பேட்டியில் பூர்ணிமா சில தவறுகள் செய்வது உண்மைதான் என பேசியுள்ளார். அதில் “பூர்ணிமாவுக்கு தலைக்கணம் எல்லாம் எதுவும் இல்லை. அவர் புரியாமல் சில தவறுகளை செய்துவிடுகிறார் அவ்வளவுதான். அவர் இந்த விளையாட்டை புரிந்து விளையாடினாலே போதும். பூர்ணிமா இரட்டை அரத்தம் கொண்ட தொணியில் பேசுவது தவறுதான். அவர் வெளியே வந்ததும் அதுகுறித்து நாங்கள் அவளுக்கு எடுத்து சொல்லுவோம்.
பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் உள்ளது நட்புதான். ஒருவேளை வெளியே வந்தும் அவருக்கு விஷ்ணுவை பிடித்திருந்தாலும் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். வீடு என்றால் சச்சரவுகள் இருக்கதான் செய்யும். அதனால் என் மகள் மீது தரம்குறைந்த விமர்சனங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். கமல் என் மகள் மீது வன்மத்தைக் கொட்டவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்” என பக்குவமாக பேசியுள்ளார்
