Thursday, May 21, 2026
Home > Cinema > இவளோ டைட்டா போட்டும் அது தெரியுது … ஆக்‌ஷன் மோடுக்கு சென்ற ரைசா!

இவளோ டைட்டா போட்டும் அது தெரியுது … ஆக்‌ஷன் மோடுக்கு சென்ற ரைசா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன ரைசா வில்சன், அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த  பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில்  நடித்து வருகிறார்.

ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளன.