Monday, May 20, 2024
Home > Cinema > சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரினஸ் திரைப்படத்தின் சென்ஸார் & ரன்னிங் டைம் தகவல்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரினஸ் திரைப்படத்தின் சென்ஸார் & ரன்னிங் டைம் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21  ஆம் தேதி வெளியாக உள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

`

அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

```
```

இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளனர். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ரிலீஸூக்கு முன்பே சுமார் 40 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரிலீஸூக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் 2 மணிநேரம் 23 நிமிடம் ஓடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.