Thursday, May 14, 2026
Home > Cinema > இளசுகளைக் கவரும் டபுள் மீனிங் நகைச்சுவை… இன்றைய ரிலீஸில் இந்த படம்தான் ஹிட்டு!

இளசுகளைக் கவரும் டபுள் மீனிங் நகைச்சுவை… இன்றைய ரிலீஸில் இந்த படம்தான் ஹிட்டு!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தொடங்கப்படாததால் இப்போது அவரே கதாநாயகனாக நடித்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து வெளியான டிரைலர் மற்றும் ஸ்னீக் பீக் ஆகியவை இன்றைய இளைஞர்களாக 2 கே கிட்ஸ்களைக் கவரும் விதமாகவும் இரட்டை அர்த்த வசனத்திலும் இருந்ததால் இளசுகளின் ஆதரவு இந்த படத்துக்குக் கிடைத்துள்ளது.

இன்று வெளியான படங்களிலேயே இந்த படத்துக்குதான் ஆதரவு அதிகமாகக் கிடைத்துள்ளது. இதனால் இன்று வெளியான பல படங்களில் இந்த படம்தான் ஹிட் ஆகும் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.