Saturday, April 18, 2026
Home > Cinema > எனக்கு இருக்குற ஒரே எதிரி பிக்பாஸ்தான்… அடி மடியிலேயே கை வைத்த….

எனக்கு இருக்குற ஒரே எதிரி பிக்பாஸ்தான்… அடி மடியிலேயே கை வைத்த….

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்த முறை போட்டியாளராக சென்றுள்ள பூர்ணிமா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.

இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.

இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.

இந்நிலையில் கமல் பேச்சைக் கூட மதிக்காமல் சில நேரம் பூர்ணிமா நடந்து கொள்கிறார். பலரிடமும் டபுள் மீனிங்கில் பேசுகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் வைக்கப்பட்டு வருகின்றன. கமல் கூட இந்த வாரம் அவரைக் கடுமையாக கண்டித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவருக்கும் பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது. அப்போது அனன்யா, பூர்ணிமாவுக்கு தவளை என்ற அட்டையைக் கொடுத்து அதை அவர் தன் தலையில் இரண்டு நாட்கள் மாட்டி இருந்தார்.

இதுபற்றி கடுப்பாகி பேசியுள்ள பூர்ணிமா “எனக்கு பிடிக்காத ஒன்றை கொடுத்து நீங்கள் என்னை bully பண்ணுகிறீர்கள். நான் மற்றவர்களை செய்ததற்குப் பெயர் bully என்றால் இதுவும் bully தான். எனக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே எதிரி இப்போது பிக்பாஸ்தான்” எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ‘எங்க தலைக்கு தில்ல பாத்தியா” என பூர்ணிமாவை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.