Friday, May 15, 2026
Home > Cinema > வெளிப்படையாக காந்தாரா இயக்குனரிடம் வாய்ப்புக் கேட்ட நடிகை… அட இது புதுசா இருக்கே!

வெளிப்படையாக காந்தாரா இயக்குனரிடம் வாய்ப்புக் கேட்ட நடிகை… அட இது புதுசா இருக்கே!

கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகம் காந்தாரா சேப்டர் 1 உருவாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் மோஷன் போஸ்டர் ரிலீஸானது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கதான் நடிகை பாயல் ராஜ்புத் வித்தியாசமான முறையில் ரிஷப் ஷெட்டியிடம் கேட்டுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் தளத்தில் இது சம்மந்தமாக பாயல் “ காந்தாரா சேப்டர் 1 படத்துக்கான ஆடிஷன் நடப்பதாக கேள்விப்பட்டேன்.  நான் இந்த பெருமைமிகு படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய சமீபத்தைய படமான மங்களாவாரம் படத்தில் என்னுடைய நடிப்பு பாராட்டப்பட்டது. நீங்கள் அந்த படத்தைப் பார்த்தால் நான் மகிழ்வேன். ஆடிஷன் குறித்தும் எனக்கு ஆலோசனை வழங்குங்கள்” எனக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் பாயல் தமிழில் இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்திருந்தார். மங்களாவாரம் படத்தில் அவர் நடித்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள பாயல், நேரடியாக எக்ஸ் தளத்தில் இப்படி வாய்ப்பு கேட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.