களவாணி படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. படத்தில் இவர் இடம்பெற்ற காட்சிகள் நகைச்சுவை ததும்பும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தன. அதனால் அவரின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. அதன் பிறகு சினிமாவில் பெரியளவில் வருவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு எந்த வாய்ப்புகளும் அமையவில்லை.
அதனால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். கல்யாணப் பரிசு சீரியலில் ஒரு கதபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் திடீரென முற்றுப் பெற்றது. இந்நிலையில் இப்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் எழுத்தாளர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் “கல்யாணப் பரிசு சீரியலின் அந்த ரைட்டரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு அப்பா மாதிரிதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவரை சந்திக்க நானும் என் அம்மாவும் சென்ற போது ‘அவர் நான் உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திட்டேன். பதிலுக்கு நீங்க எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க’ எனக் கேட்டார். நாங்கள் சம்பளத்தில் கமிஷன் தருகிறோம் எனக் கூறினோம்.
ஆனால் அவர் நானே சீரியலில் நிறைய சம்பாதிக்கிறேன். எனக்கு பணம் வேணாம். வேற என்ன கொடுப்பீங்க எனக் கேட்டார். அப்போதுதான் அவரின் தேவை என்ன என்பது எங்களுக்கு புரிந்தது. உடனே நாங்கள் அதெல்லாம் முடியாது. நாங்கள் அப்படிப்பட்ட குடும்பம் இல்லை” என்று கூறிவிட்டு வந்துவிட்டோம்.
அதற்கு முன்பே ஒரு தடவை “நான் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற போது. என்னை கட்டிப்பிடித்து விட்டார். அப்போது அவரிடம் இருந்து விலகி ஓடிவந்துவிட்டேன். அதை அவர் மறந்திருப்பார் என நினைத்தோம். ஆனால் அவர் மறக்கவில்லை.
இதனால் சீரியலில் எனக்கு தொடர்ச்சியாக ஷூட்டிங் வைப்பது. நான் நிறையக் காட்சிகளில் நடித்தாலும் அதை எடிட் செய்துவிடுவது என ஓரவஞ்சனை செய்தார். ஒரு கட்டத்தில் என் கதாபாத்திரத்தை ஒரேயடியாக முடித்து விட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட பாலியல் தொல்லைகளால்தான் தன்னால் பெரியளவில் வரமுடியவில்லை என மனிஷா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
