தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகின. இரு படங்களில் தப்பித்து வசூலில் முன்னணியில் இருப்பது சர்தார் திரைப்படம்தான். சர்தார் திரைப்படம் ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைந்தாலும், திரைக்கதை கிரிப்பாக இல்லை என்றும், வழக்கமான பாணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளன.
ஆனால் ப்ரின்ஸ் படம் ஒட்டுமொத்தமாக சர்தார் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்பது அந்த படத்துக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. வெற்றிகரமாக ஓடிய சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட சர்தார் படக்குழுவினர், படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இரண்டாம் பாகம் உடனடியாக உருவாகும் என அறிவித்து இருந்தனர். ஆனால் இப்போது இயக்குனர் மித்ரன் தெலுங்கு நடிகர் அகில் நாகார்ஜுனாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அதனால் சர்தார் 2 உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
