நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் ஏற்கனவே மலையாளத்தில் 1983, கன்னடத்தில் அஜீத் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் நடித்த 1983 திரைப்படம் இவருக்கு விருதுகளையும்,நல்ல பெயரையும் பெற்று தந்தது.

இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் பேசன் டிசைனிங் படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 1983 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் 2015 ஆண்டு ஜி.வி. பிரகாஷின் டார்லிங் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

பின்னர் தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, கீ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவர் நடித்த டமாக்கா, ராஜவம்சம் , இடியட் போன்ற திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் . இப்போது தமிழ் தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 4-5 படங்களில் நடித்து வருகிறார் . இப்போது அவர் பீச்சில் வெளியிட்ட சில வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.




