சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது.
கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்களோடு தொடர்பு கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்களையும் கமல்தான் தொகுத்து வழங்கினார்.
சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் அப்படியே பிக்பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த வார இறுதியில் தொடக்க விழா நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் இந்த முறை கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அந்த வகையில் சீரியல் நடிகை மைனா நந்தினி போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைனா நந்தினி இந்த ஆண்டு கமல் நடித்த விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். அதில் விஜய் சேதுபதி மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தினியோடு, ஜி பி முத்து மற்றும் பாடகி ராஜலட்சுமி ஆகியோரும் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
