Thursday, May 21, 2026
Home > Cinema > திடீரென எல்லா புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா மோகன்! கெளதம் கார்த்திக் தான் காரணமா?

திடீரென எல்லா புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா மோகன்! கெளதம் கார்த்திக் தான் காரணமா?

தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருபவர் மஞ்சிமா மோகன். ஆனால் அவரால் முன்னணி நடிகையாக உருவாக முடியவில்லை.

மஞ்சிமா மோகன் சமீபத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இதை இருவருமே சமீபத்தில் சமூகவலைதளம் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தனர். அவர்களின் திருமணம் சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.