கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதை தொடர்ந்து “கைதி 2” படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான “விக்ரம்” படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்று கூடுதல் கவனத்தை ஈர்த்தன.
இதையடுத்து கைதி 2 திரைப்படம் உருவாக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமான கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி அடுத்த ஆண்டு “கைதி 2” தொடங்கும் இப்போது லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால் அந்தப் படத்தை முடித்த பிறகு “கைதி 2” படத்தின் பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்போது லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளாராம். இந்த படங்களில் ஒன்றில் ராகவா லாரன்ஸ் மற்றும் மற்றொன்றில் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. லாரன்ஸ் படத்தை ரத்னகுமாரும், விக்ரம் படத்தை லோகேஷின் உதவியாளரும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
