தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் லட்சுமி மேனன். அதன் பின்னர்நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையானார்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் பிறந்தார்.இவர் கேராளவில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடன கலையை நன்கு கற்று தேர்ந்தார்.இவர் 2011 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதைத்பார்த்த மலையாள இயக்குநர் வினையன் இவருக்கு “ரகுவிண்டெசுவந்தம் ரசியா” என்ற மலையாள படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதையடுத்து தமிழில் சுந்தர பாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின் 2014 ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த குட்டி புலி, பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் இவருக்கு வெற்றி பெற்று தந்தது. இதற்கிடையில் அவர் சில ஆண்டுகள் படங்களில் இருந்து நடிக்காமல் கொஞ்சம் நாள் விலகி இருந்தார்.
அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் இணைந்து புலி குத்திபாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது செகண்ட் இன்னிங்ஸ்க்காக காத்திருக்கும் அவர், தன்னுடைய பள்ளிகால காதல் விஷயத்தை ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் பள்ளிப் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். அவர் இப்போது வேறு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அப்போது என்னிடம் பட்டன் வைத்த போன்தான் இருந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல் அவரிடம் பேசவேண்டும் என்பதால் இரவில் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு பேசுவேன். அப்போது ஒருநாள் திடீரென பவர் கட் ஆக போர்வைக்குள் செல்போன் வெளிச்சம் மட்டும் தெரிய என் அம்மா என்னைப் பார்த்துவிட்டார். அதன் பிறகு நான் அவருடன் பேசுவது நின்று போனது” எனக் கூறியுள்ளார்.
