Tuesday, May 21, 2024
Home > Cinema > என்ன மா இப்படி காட்டுற !! குஷ்புவை ஓவர்டேக் செய்யும் குஷ்பு மகளின் போட்டோஷூட்

என்ன மா இப்படி காட்டுற !! குஷ்புவை ஓவர்டேக் செய்யும் குஷ்பு மகளின் போட்டோஷூட்

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் 90 களில் கோலோச்சிய நடிகை குஷ்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ்நாட்டில் குஷ்பு இட்லி எல்லாம் ட்ரண்ட் ஆனது. மேலும் சிலர் குஷ்புவுக்கு கோயிலும் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அவ்வளவு பிரபலமாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார்.

`

திமுகவில் சில காலம் இயங்கியவர், பின்னர் காங்கிரஸுக்கு சென்றார். அங்கும் சில காலம் மட்டுமே இருந்தவர் தற்போது பாஜகவுக்கு தாவியுள்ளார். தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

இப்போது மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஷோ மற்றும் பார்ட் டைம் அரசியல் என பிஸியாக இருக்கிறார். குஷ்பு சுந்தர் சி தம்பதிகளுக்கு அவந்திகா, அத்திகா என இரண்டு மகள்கள். குழந்தைகளாக அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆவது உண்டு.

```
```

ஆனால் இப்போது குமரிப் பெண்ணாக குஷ்புவின் மகள் அவந்திகா, தாறுமாறான கிளா மர் உடையில் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அல்லோல கல்லோல படுத்தியுள்ளனர்.

இந்த புகைப்படங்களைப் பார்த்து பலரும் விரைவில் அவந்திகா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என ஆருடம் கூறிவருகின்றனர். மேலும் சிலரோ வருஷம் பதினாறு படத்தில் பார்த்த டீனேஜ் குஷ்பு போலவே இருப்பதாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.