Tuesday, June 2, 2026
Home > Cinema > என்ன மா ஒரசுது …. நைட் பார்ட்டியில்.. டாப் ஆங்கிளில்.. கீர்த்தி சுரேஷ்.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரல் போட்டோ

என்ன மா ஒரசுது …. நைட் பார்ட்டியில்.. டாப் ஆங்கிளில்.. கீர்த்தி சுரேஷ்.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரல் போட்டோ

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Keerthi Suresh at Night party

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள்.

Keerthy Suresh at Night party

இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன்.  சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

Keerthi Suresh in Glamorous dress at Night party

அதன் பின்னர் வரிசையாக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் நடித்த மகாநடி படத்துக்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

கீர்த்தி சுரேஷ் போலவே மற்றொரு திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார்.

Keerthi Suresh and Aishwarya Rajesh at Party

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதையடுத்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக அவர் நடித்து வருகிறார்.

இருவருமே கிளாமர் வேடங்களை மறுத்து ஹோம்லி மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நைட் பார்ட்டி ஒன்றில் இருவரும் மாடர்ன் உடையணிந்து இறுக்கி அணைத்து கன்னத்தோடு கன்னம் உரசி எடுத்துகொண்டுள்ள செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.