Nayanthara’s Annapoorani Movie
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
The most nonsensical movie ever !!! #Annapoorani
— Uptown Girl (@sumone_me) January 12, 2024
What was @NetflixIndia smoking while making such movie ??
pic.twitter.com/j6v6gxLlH2
சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள அழைத்தனர். அவர் நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதனால் அவர் சம்பளமும் பல மடங்கு எகிறி இப்போது 10 கோடிரூபாயில் நிற்கிறது.
Why Nayanthara’s Movies are Failing
ஆனால் சமீபகாலமாக அவர் கதையின் மையப் பாத்திரமாக நடிக்கும் எந்த படங்களும் ஹிட்டாவதில்லை. அதற்கு சமீபத்தைய உதாரணம் அன்னபூரணி திரைப்படம். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பலத்த அடி வாங்கிய நிலையில் ஓடிடியில் ரிலீஸான போது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதனால் வடநாட்டில் உள்ள ஒரு இந்துதுவ அமைப்பு இந்த படத்துக்கு எதிராக புகார் கொடுக்க, நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக இந்த படம் தூக்கப்பட்டுள்ளது.
Reason why #Annapoorani removed from Netflix pic.twitter.com/WosKBIrA3V
— Taurus (@itz_chillax) January 11, 2024
Why Annapoorani Movie was Taken down from Netflix
சரி அப்படி என்னதான் படத்தில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் உள்ளன என்று பார்ப்போம். படத்தில் கதாநாயகியான அன்னபூரணி ஒரு பார்ப்பன குடும்ப பெண், அவர் தன்னுடைய கனவான சமையல் தொழிலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காக அவர் அசைவ உணவை சமைக்க வேண்டிய ஒரு போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அப்போது அவர் அசைவ உணவு சமைக்க தயங்க அவரின் நண்பரான ஜெய் கதாபாத்திரம் “ராமாயணத்தில் ராமரே அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். கண்ணப்பர் கடவுளுக்கு அசைவ உணவு படைத்துள்ளார்” என சில புராண இதிகாச உதாரணங்களை சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார். இவையெல்லாமே வரலாற்றில் புராணங்களில் உள்ள உதாரணங்கள்தான்.
ராமர் Non Veg சாப்பிட்டார் ராமாயணத்துல தெளிவா இருக்கு – துஷ்யந்த் மாம்ஸ் !
— Arun Journalist (@arunbignews) January 11, 2024
மாம்ஸ் நீங்க வாங்கோ இந்த சப்ஜெக்ட்ட அயோத்தியால பேசுங்கோ நல்லா
கல்லாகட்டும்…#Annapoorani #ramar pic.twitter.com/pHbuU9H9Wn
Real Reason why Annapoorani movie was Removed from Netflix
அதே போல ஒரு காட்சியில் பிராமணப் பெண்ணான நயன்தாரா உணவில் சுவை கூட்டுவதற்காக இஸ்லாமியர்கள் செய்வது போல நமாஸ் செய்துவிட்டு சமைக்க தொடங்குகிறார். இந்த காட்சியை குறிப்பிட்டு எப்படி ஒரு பிராமணப் பெண் நமாஸ்செய்வது போல காட்சி அமைக்கலாம் என சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆனால் படத்தில் சொல்லப்பட்டுள்ள ராமர் அசைவ உணவு சாப்பிட்டார் என்பதற்கு பல ஆதார இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் புராண இதிகாச காலங்களில் பிராமண சமூகமே மாமிச உணவு சாப்பிட்டவர்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது.
