Monday, May 6, 2024
Home > Cinema > “என் படமும் வெற்றிபெறணும்… அவர் படமும் வெற்றிபெறணும்…” சர்தார் மேடையில் கார்த்தி!

“என் படமும் வெற்றிபெறணும்… அவர் படமும் வெற்றிபெறணும்…” சர்தார் மேடையில் கார்த்தி!

“என் படமும் வெற்றிபெறணும்… அவர் படமும் வெற்றிபெறணும்…” சர்தார் மேடையில் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன், விருமன் என இரண்டு ஹிட் படங்களை 2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.

`

விழாவில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி “1980 களில் ராணுவத்தில் சேர்ந்து உளவாளி ஆகும் ஒருவனின் கதை இது. இந்த படத்தில் நான் பல கெட்டப்களில் நடித்துள்ளேன். தீபாவளி நாளில் சர்தார் திரைப்படமும், பிரின்ஸ் திரைப்படமும் வெளியாகிறது. இரண்டு வெவ்வேறு வகையான பொழுதுபோக்கை அளிக்கும் படங்கள். இரண்டுமே வெற்றிப் பெறவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

```
```

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.