Monday, May 20, 2024
Home > Cinema > கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார்… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார்… அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி!

பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

`

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

```
```

தீபாவளிக்கு இந்த படம் ஏற்கனவே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பாகவே அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி திங்கள் கிழமை வருவதால் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக மூன்று நாட்கள் முன் தள்ளி அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தீபாவளிக்கு வெளியாகும் மற்றொரு திரைப்படமான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் அக்டோபர் 21 ஆம் தேதிதான் ரிலீஸாக உள்ளது.