Sunday, April 28, 2024
Home > Cinema > காத்துள்ள போதே தூத்திக்கணும்… சர்தார் பார்ட் 2 வை சூட்டோடு சூடாக அறிவித்த படக்குழு!

காத்துள்ள போதே தூத்திக்கணும்… சர்தார் பார்ட் 2 வை சூட்டோடு சூடாக அறிவித்த படக்குழு!

கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் இந்த தீபாவளி ரேஸில் வின்னராகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.

`

ஆனால் இந்த இரு படங்களில் தப்பித்து வசூலில் முன்னணியில் இருப்பது சர்தார் திரைப்படம்தான். சர்தார் திரைப்படம் ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைந்தாலும், திரைக்கதை கிரிப்பாக இல்லை என்றும், வழக்கமான பாணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளன. ஆனால் ப்ரின்ஸ் படம் ஒட்டுமொத்தமாக சர்தார் திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெறவில்லை என்பது அந்த படத்துக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

```
```

இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 42 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று வெற்றி விழாவில் கலந்துகொண்ட சர்தார் படக்குழுவினர், படத்தின் இரண்டாம் பாகத்தை ஒரு ப்ரோமோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.