Friday, August 21, 2026
Home > Cinema > சென்னை கலாஷேத்ராவில் வேலை… விண்ணப்பிக்க தகுதிகள் என்ன்?

சென்னை கலாஷேத்ராவில் வேலை… விண்ணப்பிக்க தகுதிகள் என்ன்?

சென்னையில் அமைந்துள்ள கலாஷேத்ராவில் இரண்டு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னையில் அமைந்துள்ள கலாசேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள இரண்டு காலி பணியிடங்களுக்கான பணிநிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

TGT மற்றும் Physical education Teacher ஆகிய இரண்டு பணிகளுக்கான 2 காலியிடங்கள் உள்ள நிலையில் 35 வயது முதல் 62 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணிகளுக்காக மாத சம்பளம் 20000 முதல் 25000 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணி இருக்கும் என்றும், பணிக்கான கல்வித் தகுதி 10th, BA, B.Ed, MA, M.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்புவர்கள் நேர்காணல் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.