இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. 90 களில் பல வெற்றிப்படங்களை தயாரித்த அவர் 2000 களுக்குப் பிறகு படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி, சினிமா பைனான்ஸில் ஈடுபட்டார். இடையே தன் மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரை கதாநாயகர்களாக்கி படங்களை தயாரித்தார்.
அதில் ஜித்தன் ரமேஷ் பெரிதாக ஜொலிக்காவிட்டாலும், ஜீவா பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். கற்றது தமிழ், கோ, சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து வளரும் நட்சத்திரமாக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் வரிசையாக தோல்விப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அதனால் அவரின் மார்க்கெட் அடிவாங்கி, இப்போது அவர் கைவசம் படங்களே இல்லை.

இந்நிலையில் அவர் ஓடிடியில் இப்போது ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இப்போது ஜீவா ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் முடிவை எடுத்துள்ளார் ஜீவா. வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படத்தில்தான் அவர் வில்லனாக நடிக்க உள்ளாராம். இந்த வேடத்தில் முதலில் நடிக்க நடிகர் அருண் விஜய் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
