தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்துவரும் வனிதா விஜய் குமார் தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப்ரதீப்பை வெளியேற்றியதற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசி இருந்தார்.
இதைப் பிடித்துக்கொண்ட வனிதா விஜயகுமார் “என் பெண் வுமன் சேஃப்டி எதுவுமே பேசவில்லை. ஆனால் அவள் பெயரைக் கெடுப்பது போல ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு இருப்பதால் நான் கமல் மற்றும் விஜய் டிவி மீது வழக்கு தொடர்வேன். வரும் வாரம் இந்த பிரச்சனை குறித்து கமல் பேசியே ஆகவேண்டும்.” எனக் கூறி சீன் போட்டிருந்தார்.
இந்நிலையில் வனிதா வெளியில் இருந்து மகள் ஜோவிகாவுக்கு எப்படி விளையாட வேண்டும் என சிக்னல் கொடுத்து வருவதாக ஒரு கம்ப்ளயண்ட் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஜோவிகாவுக்கு மஞ்சள் நிறத்தில் ஒரு டிஷர்ட்டை வனிதா அனுப்பி இருந்தார். அதில் சிங்கம் சிங்கிளாதான் வரும் என்ற வாசகம் இருந்தது.
இதன் மூலம் தன்னுடைய கூட்டாளிகளான மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோரோடு சேராமல் தனியாக நின்று விளையாடுமாறு அவருக்கு மறைமுக அட்வைஸ் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கண்டுபிடித்து விவாதித்து வருகின்றனர்.
