தமிழ் சினிமாவில் கிச்சா வயசு பதினாறு., ராமகிருஷ்ணா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜெய் ஆகாஷ். ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடாததால் அவரால் முன்னணி நடிகராக வர முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு சினிமா மோகம் இன்னும் போகவில்லை. இப்போது ஜெய் விஜயம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த ஜெயஷதீசன் நாகேஸ்வரன் இயக்கியுள்ளார். அகஷய கண்டமுதன், அட்சய ராய், மைக்கேல் அகஷ்டின் என பலர் நடித்துள்ள நிலையில் சதீஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
Jai Akash about his ex lover. What a Sad story. 🥲pic.twitter.com/BHnMLvOWtb
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 8, 2024
காதல் மற்றும் ஆக்ஷன் திரில்லர் படமாக இது உருவாகி வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஜெய் ஆகாஷ் தன்னுடைய காதலி பணத்துக்காக தன்னை ஏமாற்றிவிட்டு சென்றது பற்றி பேசி புலம்பியிருந்தார்.
அவரது பேச்சில் “நான் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அந்த பெண் பணத்திற்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நான் அதை வைத்து தான் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய படத்தில் என் காதலியை நல்லவளாகக் காட்டி இருக்கிறேன். என்னுடைய காதலும் உண்மை, நான் காதலித்த பெண்ணும் உண்மை” என எமோஷனலாக பேசியுள்ளார்.
Jai Akash Ex-Lover யாரு?
— R 🅰️ J (@baba_rajkumar) January 8, 2024
பால்வாடிகளா கர்மா ன்னா என்னன்னு தெரியுமா?
இன்னும் ஆதாரம் போடலாமா?@Bloody_Expiry @mangathadaww @itz_Rajeshlms @Revanth_K5 @syedfromdubai
பொத்திகிட்டு இருக்கணும் 😷😷😷 https://t.co/HbwiolHrFe pic.twitter.com/C8dqg8v9xk
இதையடுத்து இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் கிசுகிசு மன்னனுமான பயில்வான் ரங்கநாதன் “அவரைப் பற்றி ஒரு கிசுகிசு வெளியிட்டேன். இவரும் லண்டனில் இருந்து வந்தார். அவர் காதலித்த பெண்ணும் லண்டனில் இருந்து வந்தார். இருவரும் காதலித்தார்கள். பின்னர் அந்த பெண் வேறு ஒரு நடிகரை கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டார் என கிசுகிசு எழுதினேன். ஆனால் உண்மையைதான் கிசுகிசுவாக எழுதினேன். அங்க பாருங்க ஜெய் ஆகாஷே சிரிச்சுட்டாரு” எனக் கூற மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
பயில்வான் இப்படி கொளுத்தி போட அந்த பெண் யாராக இருக்கும் என ரசிகர்கள் இப்போது விவாதமே நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இப்போது உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரின் மனைவியும் லண்டனில் இருந்து வந்தவர் என்பதால் அவரோடு ஜெய் ஆகாஷை இணைத்து பேச ஆரம்பித்துள்ளனர். பயில்வான் நினைத்தது இப்போது அப்படியே நடந்து விட்டது.
Jai Akash about his ex lover. What a Sad story. 🥲pic.twitter.com/BHnMLvOWtb
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 8, 2024
