Saturday, August 22, 2026
Home > Cinema > ஹன்சிகாவின் காதலர் ஏற்கனவே திருமணம் ஆனவரா?… முதல் திருமணத்தில் அவரே கலந்துகிட்டாரா?

ஹன்சிகாவின் காதலர் ஏற்கனவே திருமணம் ஆனவரா?… முதல் திருமணத்தில் அவரே கலந்துகிட்டாரா?

ஹன்சிகா விரைவில் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை மணக்க உள்ளார்.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.  தற்போது அவர் கைவசம் தமிழ் உள்பட எந்த மொழிகளிலும் பெரிதாக படங்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்போது ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக உள்ளார்.

தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதுவரை மணமகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்த ஹன்சிகா முதல் முதலாக வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் ஹன்சிகாவை இப்போது மணக்க உள்ள சோஹைல் கதூரியா கடந்த 2017 ஆம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனவராம். அதற்குப் பின்னர் அவருக்கு விவாகரத்து நடந்து இப்போது ஹன்சிகாவை மணக்க உள்ளார். இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் சோஹைலின் முதல் திருமணத்துக்கு ஹன்சிகா சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.