நடிகர் கவுண்டமணி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவர், கவுண்டமணி, 1980 கள் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்தவர் 2000களுக்குப் பிறகு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் விலகினார்.
ஆனாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்த அவர் கடைசியாக 49 ஓ மற்றும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அந்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை செல்வேந்திரன் அன்பு என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
