Monday, May 20, 2024
Home > Cinema > அஜித் படத்தில் நடிக்க கேட்டிருக்காங்க.. டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

அஜித் படத்தில் நடிக்க கேட்டிருக்காங்க.. டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

டிக்டாக் மூலமாக கவனம் ஈர்த்த ஆன ஜி பி முத்து இப்போது இணையத்தில் பிரபல அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ளார்.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

`

இதை முடித்ததும் அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை.

```
```

இந்நிலையில் இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஒரு கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜி பி முத்து “அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.அஜித் படத்தில் நடிக்க பேசினார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்த தகவலை அடுத்து ஜி பி முத்து அஜித் 62 படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.