Monday, May 20, 2024
Home > வேலைவாய்ப்பு > TNPSC நிறுவனத்தில் வேலை… வெளியான அறிவிப்பு!

TNPSC நிறுவனத்தில் வேலை… வெளியான அறிவிப்பு!

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையத்தில் 5 காலி இடங்களுக்கான வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைக்கான பணியாளர்களை பல்வேறு தேர்வுகளின் மூலமாக TNPSC நிறுவனம் தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் TNPSC நிறுவனத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை கல்வியை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 32 ல் இருந்து 37 வரை இருக்கலாம். நேர்காணல் மூலம் இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் 150 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம் ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

```
```

TNPSC இணையதளத்தின் மூலமாக இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.