Saturday, October 5, 2024
Home > Cinema > பருத்திவீரன் விவகாரத்தில் சூர்யா வெளியிட இருந்த லெட்டர் மட்டும் வந்திருந்தா? … இந்த காரணத்துனாலதான் வரலயாம்..  பிரபலம் பகிர்ந்த தகவல்!

பருத்திவீரன் விவகாரத்தில் சூர்யா வெளியிட இருந்த லெட்டர் மட்டும் வந்திருந்தா? … இந்த காரணத்துனாலதான் வரலயாம்..  பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஸ்டுடியோ கிரீன் (Studio Green) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி   தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சில்லுனு ஒரு காதல் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் ஞானவேல் ராஜா.

இப்படத்தினை தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ், இன்று நேற்று நாளை, கொம்பன், டார்லிங் 2, மிஸ்டர் லோக்கல், பத்துதலபோன்ற மிகப்பெரிய படங்களில் தயாரித்து பிரபலமானார். மாஸ் படங்களை தாண்டி இறைவி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் தங்கலான், கங்குவா படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பருத்திவீரன் படத்தில் இயக்குனர் அமீர் போலிக் கணக்குக் காட்டி திருடினார் என்று ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

`

இதையடுத்து இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சினிமாத் துறையில் இருந்து ஒரு பட்டாளமே களமிறங்கியது. இயக்குனர் கரு பழனியப்பன், பொன்வண்ணன், நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் சசிக்குமார் என பலரும் அமீருக்கு ஆதரவாகப் பேச ரசிகர்கள் ஞானவேல் ராஜாவோடு சேர்த்து சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோரையும் சேர்த்து தாக்க ஆரம்பித்தனர்.

இதில் சூர்யா குடும்பத்தின் மொத்த நல்ல குடும்பம் இமேஜும் டேமேஜ் ஆக சூர்யா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமோ, பதிலோ வரவில்லை. இந்நிலையில் இப்போது சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இதுபற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

```
```

ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நான் இது சம்மந்தமாக சூர்யா சாரிடம் பேசி ‘நீங்கள் விளக்கம் கொடுக்காவிட்டால், உங்கள் மேல்தான் முழுத் தப்பும் என்று புரிந்துகொள்ளப்படும். அதனால் உங்கள் பக்க நியாயத்தை சொல்லுங்கள் என்றேன். முதலில் வேண்டாம் என்ற அவர் அதன் பிறகு ஒரு விளக்கக் கடிதத்தை தயார் செய்தார்.

ஆனால் அந்த கடிதத்தை வெளியிடலாம் என்றிருந்த போது  விஜயகாந்த் சார் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சென்னை வெள்ளப் பிரச்சனை வந்தது. இதனால் கடைசி வரை அந்த லெட்டர் வரவேயில்லை. சூர்யா சாரும் “பரவாயில்லை சார், தாக்கப்பட்டோம். தாக்கப்பட்டவர்களாகவே இருப்போம்’ என சொல்லிவிட்டார். அந்த லெட்டரில் அவர்கள் பக்கம் நியாயம் எல்லாம் ரொம்ப நியாயமாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.