தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு பல பேரிடம் கெட்ட பேரை சந்தித்தார். அவர் இறுதிவரை பிக்பாஸில் போட்டி போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் நடப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரை ரசிகர்கள் மறந்தனர். அதனால் அம்மணி என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் திடீரென்று அவர் அழுதபடி தோன்றும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் அதில் ‘வாழ்க்கையின் முடிவு மரணம்’ எனக் குறிப்பிட்டுருந்தார். உடனே ரசிகர்கள் பதறி போய் அவருன் ஐடியில் சென்று பார்த்தால் அதில் ஒரு பாட்காஸ்ட் வீடியோ இடம்பெற்றிருந்தது.
அதில் அம்மணி ஜாலியாக படுத்துக்கொண்டே, அதில் ஒரு குரல் ’என்ன அழுதுகிட்டே வீடியோ போட்டிருந்த’ எனக் கேட்க, அதற்கு “ரொம்ப நாளா எதுவும் பதிவு போடல. அதான் வைரல் ஆகலாம்னு போட்டேன்” என ஜாலியாகக் கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பாகி கமெண்ட்ஸில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
