Wednesday, April 15, 2026
Home > Cinema > 16 வயது பெண்ணை பலவந்தப்படுத்திய வடிவேலு.. பிரபல நடிகரின் மகளுக்கே இந்த நிலையா.? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்

16 வயது பெண்ணை பலவந்தப்படுத்திய வடிவேலு.. பிரபல நடிகரின் மகளுக்கே இந்த நிலையா.? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்

நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை.

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது.

பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வடிவேலு அந்த படத்தில் மீண்டும் நடிக்க மறுத்தார். இதையடுத்து இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார். அதில் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் வடிவேலுவைப் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அதில் “வடிவேலு நடித்த படம் ஒன்றின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தது. அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவரின் இரண்டாவது தாரத்தின் மூலம் பிறந்த பெண் ஒருவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு வயது 16.

ஆனால் பழம்பெரும் நடிகர் சுருளிராஜனின் மகள் குறித்து அவர் சொன்ன விஷயம் தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது வடிவேலு நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்திருக்கிறது. அப்படத்தில் சுருளிராஜனின் 2வது மனைவிக்கு பிறந்த 16 வயது பெண் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம்.

அன்றிரவு அந்த பெண்ணிடம் வடிவேலு படுமோசமாக நடந்துகொண்டார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நானும் தயாரிப்பு நிர்வாகியும் ஓடினோம். மோசமான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம்” என பயில்வான் கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடம் நடுராத்திரியில் வடிவேலு அத்துமீறி நடந்திருக்கிறார். அவருடைய பலவந்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அலறல் கேட்டு பயில்வான் மற்றும் தயாரிப்பு நிர்வாகி இருவரும் அந்த இடத்திற்கு ஓடி இருக்கின்றனர். அப்போதுதான் வடிவேலுவின் அரக்க குணம் தெரிந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு நானே சாட்சி என்றும் அவர் கூறியிருக்கிறார். இது உண்மையில் பேரதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.

பயில்வானின் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி வடிவேலுவின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதில் இந்த வீடியோவும் அவரின் இமேஜை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டது.