பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். வெற்றிகரமாக ஓடிய கடந்த 5 சீசன்களிலும் தொகுப்பாளராக இருந்தார் உலக நாயகன் கமலஹாசன் .
அடுத்ததாக சீசன் 6 வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது . இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களை பற்றிய தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது .

இதில் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர் முதல் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது .
அவர்கள் யார் என்றால் விஜய் டிவி யின் தொகுப்பாளராக இருக்கும் திவ்யா தர்ஷினி என்கின்ற டிடி யும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணமாவாக நடித்த முன்னாள் கதாநாயகியான ரோஷினி ஹரிப்ரியன் . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகினார். பின்னர் குக்கு வித் கோமாளி சீசன் 3 இல் பங்கேற்றார்.

இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதால்.
நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது .
