Saturday, April 18, 2026
Home > Cinema > அஜித்துக்கு வில்லனாகும் ஸ்டைலிஷ் நடிகர்… அட இது செம்ம காம்போ ஆச்சே!

அஜித்துக்கு வில்லனாகும் ஸ்டைலிஷ் நடிகர்… அட இது செம்ம காம்போ ஆச்சே!

துணிவு படத்தை முடித்ததும் அஜித் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் பற்றிய எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் இப்போது திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவே முக்கியக் காரணமாக இருந்தவர் நயன்தாராதான். ஆனால் அவருக்கு பதிலாக திரிஷாவை ஹீரோயின் ஆக்கும் இந்த முடிவு ஏன் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.