தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அமீர். அவர் இதுவரை மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் மற்றும் ஆதி பகவன் என நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் சந்தன தேவன் மற்றும் இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இன்றளவும் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த படத்தில் அறிமுகமான கார்த்திக்கு 10 படங்களில் கிடைத்தபின்னர் என்ன வரவேற்புக் கிடைக்குமோ அந்தளவுக்கு வரவெற்புக் கிடைத்தது. ரசிகர்கள் அவரைக் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பருத்திவீரன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியொன்றில் பருத்திவீரன் படத்தில் இயக்குனர் அமீர் செய்த அயோக்கியத்தனத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார் ஞானவேல் ராஜா. 2 கோடி பட்ஜெட்டில் எடுத்த பருத்திவீரன் படத்தின் கணக்கை தயாரிப்பாளர் சங்கம் கேட்டனர். அந்த கணக்கை காட்டும் விசயத்தை போலி கணக்கை எழுதி கொடுத்தார். உண்மையாக ஆன செலவை விட பல மடங்கு அதிகமாக செலவு காட்டுவார் அமீர்
2 கோடி பட்ஜெட்டில் எடுத்த பருத்திவீரன் படத்தின் கணக்கை தயாரிப்பாளர் சங்கம் கேட்டனர். அந்த கணக்கை காட்டும் விசயத்தை போலி கணக்கை எழுதி கொடுத்தார். உண்மையாக ஆன செலவை விட பல மடங்கு அதிகமாக செலவு காட்டுவார் அமீர்” என பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இதையடுத்து அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இயக்குனராக அமீர் வெற்றிகரமாக ஜொலித்தாலும் அவர் தயாரித்த சில படங்கள் அவரை பொருளாதார ரீதியாக பின்தங்க வைத்தன. அவர் முதன் முதலில் தயாரித்த ராம் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும், பொருளாதார ரிதியாக கொஞ்சம் சறுக்கல்தான் என சொல்லப்படுகிறது. அந்த கடனுக்காகதான் அவர் பருத்திவீரன் படத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் முதன் முதலில் யோகி என்ற படத்தில் நடித்து தயாரித்தார். அந்த படத்தால் அவருக்கு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம். அதே போல அவர் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்த அச்சமில்லை அச்சமில்லை திரைப்படமும் இன்றளவும் ரிலீஸாகவில்லை. அந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி வைத்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அதை ரிலீஸ் செய்யாமல் இழுத்தடித்து வருவதாக அமீர் கூறியுள்ளார்.
