Friday, August 21, 2026
Home > Cinema > துணிவு படத்தில் இடம்பெறப் போகும் மாஸ் ஆன ப்ரோமோ பாடல்… வெளியான எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

துணிவு படத்தில் இடம்பெறப் போகும் மாஸ் ஆன ப்ரோமோ பாடல்… வெளியான எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் படத்தில் ஒரு அட்டகாசமான ப்ரோமோ பாடல் இடம்பெற உள்ளதாகவும், அதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாடலை நடன இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.