Thursday, April 16, 2026
Home > Cinema > கூடவே இருந்தவருக்கு புற்றுநோய்… ஆனா அது அஜித்துக்கு தெரியுமா?

கூடவே இருந்தவருக்கு புற்றுநோய்… ஆனா அது அஜித்துக்கு தெரியுமா?

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட்டு, இப்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் தந்தை சுப்ரமணி இறந்தது, அவரது குடும்பத்துக்கு சோக செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அஜித்துக்கு மிகவும் நெருக்கமான ஒருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களாக தயாரித்து வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்ரவர்த்தி. இவர் வேறு நடிகர்களை வைத்து தயாரித்த படங்கள் மிகக்குறைவு. ஆனால் ஒரு கட்டத்தில் அஜித்துக்கும் அவருக்கும் இடையிலான உறவு முறிந்தது. அவர்கள் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் என்றால் அது வரலாறு படம்தான்.

அதன் பின்னர் சக்ரவர்த்தி, அதிகமாக சினிமா தயாரிப்பிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்துள்ளதாம். இது சினிமா உலகில் பலருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில் சக்ரவர்த்திக்கு உற்ற தோழனாக இருந்த அஜித்துக்கு இன்னும் இந்த தகவல் போய் சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.