Saturday, May 4, 2024
Home > Cinema > என்ன இப்படி இறங்கிட்டாங்க… ஜிம்மே கதியென்று கிடக்கும் ஐஸ்வர்யா ரஜினி- ஹீரோயின்களுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல!

என்ன இப்படி இறங்கிட்டாங்க… ஜிம்மே கதியென்று கிடக்கும் ஐஸ்வர்யா ரஜினி- ஹீரோயின்களுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போல!

ரஜினிகாந்த், தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

aishwarya Rajini

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ளதை அடுத்து முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

`
aishwarya Rajini

ரஜினியின்  மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தை இயக்குகிறார்.

```
```
aishwarya Rajini

ஐஸ்வர்யா ரஜினி மற்றும் தனுஷ் தம்பதிகள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக வலம் வந்தனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற மண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் இருவரும் சமூகவலைதளப் பக்கங்களில் அறிவித்தனர். இது சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

aishwarya Rajini

இதையடுத்து தீவிரமாக சினிமாவில் இயங்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. சினிமா பணிகள் ஒருபுறம் இருந்தாலும், தன்னுடைய உடல் பராமரிப்பை தொடர்ந்து பேணி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அடிக்கடி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

aishwarya Rajini