இந்தி நடிகையான ஊர்வசி ரவுத்தாலா தமிழில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்த லெஜண்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை என்றாலும் ஊர்வசி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பாலிவுட்டில் அதிகமாக நடித்து வரும் ஊர்வசி கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னை காதலித்ததாகவும் தன்னைப் பார்க்க பண்ட் ஹோட்டல் அறையில் காத்திருந்ததாகவும் கூறி பீதியைக் கிளப்பினார்.


ஆனால் ஊர்வசியின் இந்த கருத்தை ரிஷப் பண்ட் மறுத்தார். இது சம்மந்தமாக இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து சமூகவலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டனர்.

ரிஷப் பண்ட்டுக்கு விபத்து நடந்த போதும் ஊர்வசி சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இப்போது ஓரளவு சர்ச்சைகள் ஓய்ந்துள்ளன.

இந்நிலையில் ஊர்வசி தற்போது மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார். யோ யோ ஹனிசிங் கலந்துகொண்டு பாடிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஊர்வசி நடனம் ஆடியபடியே தன்னுடைய மேலாடையை கழட்டி ரசிகர்கள் மேல் வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

