Saturday, October 5, 2024
Home > Cinema > சினேகாவுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா?… ஜிம்முல அம்மாவோட ஹார்ட் வொர்க்… அடுத்த ஹீரோ ரெடி போல!

சினேகாவுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா?… ஜிம்முல அம்மாவோட ஹார்ட் வொர்க்… அடுத்த ஹீரோ ரெடி போல!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அவர் நடித்த விரும்புகிறேன், வசூல் ராஜா, புதுப்பேட்டை என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அவரின் அறிமுகப் படமாக சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படம் அமைந்தது.

`

சினேகாவின் தனித்தன்மை அவரி கிளா மர் ரோல்களை தேர்ந்தெடுக்காமல் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததுதான். அப்படி ஹோம்லியான வேடங்களில் நடித்த அவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். ஆனால் அந்த வேடத்திலும் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார்.

```
```

திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துள்ளார். இதை அவரின் கணவர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது கோட் படத்தில் இரண்டு விஜய்களில் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜிம்மில் தன்னுடைய மகனோடு வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர, சினேகாவின் மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் அடுத்த ஹீரோ தயார் போல என்றும் வாழ்த்தி வருகின்றனர்.