Friday, June 5, 2026
Home > Cinema > பீச்சில் குட்டி ப்ராக் அணிந்து கலக்கும் ஸ்மிருதி வெங்கட்! நீங்களுமா??

பீச்சில் குட்டி ப்ராக் அணிந்து கலக்கும் ஸ்மிருதி வெங்கட்! நீங்களுமா??

தமிழில் தடம் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் ஜே பாலாஜியின் தங்கை வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஹோம்லியான வேடங்களில் நடித்து வந்த ஸ்மிருதிக்கு மன்மதலீலை வேடத்தில் கிளாமரான வேடத்தைக் கொடுத்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. ஆனால் அந்த படம் சொதப்பியதால் ஸ்மிருதியின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.

இதையடுத்து சமீபத்தில் ரிலீஸ் ஆன வதந்தி வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் அந்த தொடரில் நல்ல கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இவரின் சமூகவலைதளப் பக்கத்தை ரசிகர்கள் மொய்க்க தொடங்கியுள்ளனர். அதற்குக் காரணம் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள்தான்.